கல்வியில் மட்டுமல்ல உளவியல் ரீதியாகவும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டும் பிரதமர் மோடி!
தேர்வுகளை வாழ்க்கையின் இறுதி முடிவாக கருதக்கூடாது என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி ஆண்டுதரும் கலந்துரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி எட்டாவது ஆண்டாக பிப்ரவரி 10 அன்று நடந்தது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளரங்கில் நடந்து வந்த நிலையில் இந்த முறை டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 35 மாணவ மாணவிகள் பங்கேற்று பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர் .நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஏராளமான அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
அறிவும் தேர்வுகளும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். தேர்வுகளை இறுதி முடிவாக யாரும் கருதக்கூடாது. நேரத்தை திறம்பட கையாள வகையில் உங்கள் நேரத்தை திட்டமிட்ட வழிகளில் பயன்படுத்த வேண்டும் .உங்கள் நேரத்தை உங்கள் வாழ்க்கையை மேலாண்மை செய்யுங்கள். இந்த கணத்தில் வாழுங்கள். நேர்மறை விஷயங்களை கண்டுபிடிங்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் ஒருவர் சிறந்த மதிப்பேண்ணை பெறவிட்டால் அத்துடன் அவரது வாழ்க்கை முடிந்து விட்டதாக துரதிஷ்டவசமாக ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக அந்த வீட்டில் ஒரு பதற்றமான சூழலை நமது சமூகம் உருவாக்குகிறது .
உங்களுக்கும் அந்த அழுத்தம் இருக்கலாம். ஆனால் அது குறித்து கவலைப்படாமல் அதை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டால் உங்கள் வாழ்க்கையே பாழாகிவிடும் என்று நினைக்கக் கூடாது. கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களின் பலத்த இரைச்சலுக்கு மத்தியில் பேட்ஸ்மேன் அழுத்தத்தை கையாளுவது போல மாணவர்களும் உங்கள் தேர்வு அழுத்தத்தை கையாள வேண்டும். பார்வையாளர்களிடம் இருந்து வரும் பௌண்டரி கோரிக்கைக்கு கவனம் செலுத்தாமல் அடுத்த பந்தை அவர்கள் எதிர்கொள்வார்கள் .
அதே போல தேர்வுகள் தொடர்பான அழுத்தம் மீது கவனம் செலுத்தாமல் படிப்பை கவனியுங்கள். அதே நேரம் முந்தைய மதிப்பெண்ணைவிட அதிகம் பெறுவதில் எப்போதும் முயற்சிக்க வேண்டும் .நீங்களே அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். தலைமைத்துவம் . உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு தலைவராக மாற குழுவாக இணைந்து பணியாற்ற கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். பொறுமை மற்றும் நம்பிக்கையே பெறுவது மிகவும் அவசியம். தலைவர் என்பவர் யார் ?குர்தா ,பைஜாமா ,ஜாக்கெட் அணிந்து கொண்டு பல்வேறு தளங்களில் பேசுபவர் அல்ல.தலைவர் என்பவர் அடுத்தவர் தவறுகளை சரிபடுத்துவர் அல்ல. தன்னையே ஒரு எடுத்துக்காட்டாக மாற்றிக் கொள்பவரே தலைவர். இவ்வாறு பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை கூறி வழி காட்டினார்.