தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்: மத்திய அரசினால் இவ்வளவு நன்மைகளா.?

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்களில் தமிழகம்தான் அதிகளவில் பயன் பெற போகிறது. விவசாய துறையின் கீழ் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பலன் அதிகளவில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும். செல்போன் போன்ற மின்னணு பொருட்கள், ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகள் மூலம் தமிழகத்தில் இந்த பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெருமளவில் பயன் அடையும்.
அதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும். அதேபோல் உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில கல்வி கடன் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறு, குறு, தொழில்களில் தமிழகம்தான் முன்னணி. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. எனவே இவற்றின் பலன்களை தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்குதான் கிடைக்க போகிறது.
கல்வி கடன் பெறுவதிலும் தமிழகம் முன்னணியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அது தவிர குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், வீடுகள் கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக மக்களுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும்.