ஏஐ சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி:பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்!

வருங்காலத்தின் உலகத்தின் முக்கிய தொழில்நுட்பமாக மாறி வருகின்ற செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அறிவியல் உலகத்தை இப்பொழுதே ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது மேலும் இன்னும் அதிக சாதனைகளை செயற்கை நுண்ணறிவில் படைக்க வேண்டும் என்ற முனைப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளது
ஆனால் அதில் இருக்கும் சாதக பாதங்களை ஆராய்வதும் செயற்கை தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்வதும் எப்படி என்பது பற்றி அறிவது அவசியமாகிறது இவற்றை தெரிந்து கொள்வதற்காக சர்வதேச உச்சி மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியுள்ளது
இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோர் இணைந்து தலைமை வகித்து வருகின்றார்கள் அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நமது அரசியல் சமூகம் பொருளாதாரம் பாதுகாப்பு என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் மனித வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கங்களும் அதனால் ஏற்படுகின்ற நேர்மறையான விளைவுகளும் அற்புதமானவை
முன்பு எப்பொழுதும் இல்லாத வகையிலும் வேகத்திலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது நேர்மறையான விளைவுகளை செயற்கை தொழில்நுட்பம் ஏற்படுத்தினாலும் அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் நாம் சரி செய்ய ஒன்றிணைவது அவசியமாகிறது அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்
மேலும் இதற்காக வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் வகையிலும் நம்பிக்கையை உருவாக்கவும் ஓபன் சோர்ஸ் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும் அதே சமயத்தில் இணைய பாதுகாப்பு தவறான தகவல் பரப்புதல் போன்றவற்றின் கவலைகளையும் தீர்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்