இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் டிரம்ப் நிர்வாகம்:சிறந்த கூட்டாளி இந்தியா-லிசா கர்டிஸ்!

By : Sushmitha
பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதை முன்னிட்டு வாஷிங்டன் டிசியை தளமாகக் கொண்ட சிந்தனைக்குழுவான சிஎன்ஏஎஸ் கடந்த 11 பிப்ரவரி 2025 அன்று ஆன்லைன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் லிசா கர்டிஸ் உரையாற்றியுள்ளார் அவரது உரை தற்போது உலக செய்திகள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது
ஏனென்றால் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் முதல் ஆட்சி நடைபெற்ற காலமான 2017 முதல் 2021 இடையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குனராக பணியாற்றியவர் லிசா கர்டிஸ் அதனால் அவரது கருத்துக்கள் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய லிசா இந்தியா உடனான உறவுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது என்று கூறினார் மேலும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை மாற்றும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது எனவும் அதற்காக சீனாவை திறம்பட எதிர்கொள்வதற்கான முக்கியமான சிறந்த கூட்டாளி இந்தியா என்பதையும் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
அதுமட்டுமின்றி வருகின்ற 13 பிப்ரவரி 2025 அன்று மோடி மற்றும் ட்ரம்பின் சந்திப்பில் ஒரு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்த ஏற்கனவே நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
