பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தை:கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் நடத்திய இரு தரப்பு பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிரதமரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேலும் தங்கள் தனிப்பட்ட நல்லுறவை பிரதிபலிக்க பாரிசில் இருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபரின் விமானத்தில் ஒன்றாக பயணித்தனர் மேலும் அவர்கள் இருதரப்பு உறவுகளில் முழு பரிமாணங்கள் பற்றியும் உலகளாவிய முக்கிய பிரச்சனைகள் பற்றியும் விவாதித்து மர்சேய் சேர்த்தவுடன் தூதுக்குழு நிலை பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவரும் ஆய்வு செய்து இறுதியில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிவில் அணுசக்தி சுற்றுச்சூழல் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் என துறைகளில் 10 முடிவுகளை உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது