Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய மின் உற்பத்தியில் கலக்கும் இந்தியா: மத்திய அரசு பெருமிதம்!

சூரிய மின் உற்பத்தியில் கலக்கும் இந்தியா: மத்திய அரசு பெருமிதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Feb 2025 2:08 PM IST

உலக நாடுகளில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய எரிசக்தி வார துவக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மோடி பேசினார். அப்போது அவர் கூறும் போது, 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் சொல்கின்றனர் இந்தியா தனது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது இதில் எரிசக்திக்கு முக்கிய பங்கு உண்டு.


நம்மிடம் இயற்கை வளங்கள் பொருளாதார பலம்,அரசியல் சாஸ்திர தன்மை, புத்திசாலித்தனமான சிந்தனைகள் பூலோக புவியியல், இவை ஐந்தும் தான் இந்தியாவின் எரிசக்தி லட்சியங்களுக்கு தூண்களாக துணை நிற்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் நிறைய சாதனை படைக்கப் போகிறோம்.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது. லட்சியங்களுக்கு 5 தூண்கள் துணை நிற்கின்றன. வளர்ந்த பாரதத்திற்கு அடுத்த இரண்டு தசாப்தங்கள் முக்கியமானவை.


அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைய சாதனை படைக்கப் போகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது. நமது சூரிய மின் உற்பத்தி இரு மடங்காக அதிகரித்து இன்று சூரிய மின் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பாரிஸ் G20 ஒப்பந்தங்களின் இலக்குகளை எட்டிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News