அரசு பஸ் மோதி பள்ளி மாணவர் பலி: நெஞ்சை உருக்கும் சம்பவம்!

By : Bharathi Latha
குறிஞ்சிப்பாடி அருகே 5 பேர் பயணம் செய்த பைக் மீது அரசு பஸ் மோதியதில் பிளஸ் டூ மாணவர் இறந்தார். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவ நாராயணபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சுனில் ராஜ் 15 வயது குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
நேற்று காலை மோகன்ராஜ் என்பவருடன் குறிஞ்சிப்பாடிக்கு ஸ்ப்ளெண்டர் பைக்கில் சென்றுள்ளார் சுனில் ராஜ், பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் அதை ஊரைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி சாந்தினி பத்தாம் வகுப்பு மாணவி சந்தியா, பவித்ரா ஆகியோரும் பைக்கில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றனர். கஞ்சமநாதன் பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த சுனில் ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மோகன்ராஜ், சாந்தினி, சந்தியா, பவித்ரா ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
மோகன்ராஜ், பவித்ரா சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனிலும், சாந்தினி, சந்தியா கடலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கு குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி உயிரை பணயம் வைத்து பயணம் செய்வது என்றேனும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று போலீசார் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
