மருத்துவர்கள் ஏன் இன்னும் வரவில்லை? அரசு மருத்துவமனையில் நடிகர் ஆவேசம்!

By : Bharathi Latha
சென்னை அருகே அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை நோயாளிகள் தவிக்கின்றனர் என கஞ்சா கருப்பு புகார் கூறும் வீடியோ வெளியாகி வரவேற்பு ஏற்படுத்தியிருக்கிறது.சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாய அரசு மருத்துவமனை உள்ளது நடிகர் கஞ்சா கருப்பு கால் வலி காரணமாக சிகிச்சைக்காக அங்கு சென்றுள்ளார் அவர் சென்றிருந்த நேரம் மருத்துவமனையில் உள்ளே டாக்டர்கள் யாரும் இல்லை என்று தெரிய வருகிறது.
அதேநேரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். டாக்டர்கள் யாரும் இல்லாததால் மற்ற நோயாளிகள் பூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென அங்கிருந்து மற்ற நோயாளிகள் நடிகரான கஞ்சா கருப்பு உடன் இணைந்து மருத்துவமனையில் உள்ள வேலை செய்யும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது லட்சகணக்கான ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு வேறு எங்கோ தனியாக கிளினிக் நடத்தி வரும் அரசு மருத்துவர்களை கண்டிக்க வேண்டும் இதனால் அரசு மருத்துவமனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது பற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டும் வெறிநாய்க்கடித்து ஒருவர் வந்திருக்கிறார், மண்டை உடைந்து மாணவர் ஒருவர் மருத்துவத்திற்காக வந்திருக்கிறார். இவர்களை யார் கண்டு கொள்வது, ஊதிய அரசு மருத்துவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டும் அவர்கள் வேலை நேரத்தில் எங்கும் செல்லக்கூடாது என அவர் கோபத்துடன் கூறினார்.
