கனிமவளக் கொள்ளை விவகாரம்: மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

By : Bharathi Latha
ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அம்மாவட்டத்தில் அடங்கியுள்ள கனிம வளங்களை பொறுத்துதான். அந்த வகையில் கனிம கனிம வள கொள்ளை என்பது மிகவும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாகும். ஏனென்றால் அந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களை தங்களுடைய சொந்த மாவட்டத்தின் வளங்களை திருடி கொள்கையில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தற்போது கனிம வள கொள்ளையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.
கனிமவள கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர் அருகே குமாரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளை அடிக்கப்படுவதாக செய்தி வெளியாகியது. இதையடுத்து, அப்பகுதியில் முகாம்மிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர், கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
