பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

By : Bharathi Latha
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இந்திய வம்சாவளியினர் சந்தித்தார், அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பிரதமரை வரவேற்றனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஐரோப்பிய நாடான பிரான்ஸ்க்கு சென்று இருந்தார். அங்கு ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பிரான்ஸுடன் இணைந்து இந்தியா நடத்தியது.இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு இந்த உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த உள்ளனர்.
பிரான்சில் உள்ள மார்ஷலேவுக்கு, பிரான்ஸ் அதிபரின் விமானத்தில் மேக்ரோனுடன், பிரதமர் மோடி பயணம் செய்தார்.தன் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்ட மோடியை மேக்ரோன் விமான நிலையம் வரை சென்று வழி அனுப்பி வைத்தார்.இதை எடுத்து அவர் வாஷிங்டன் சென்று அடைந்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் வர்த்தகம், எரிசக்தி,பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து சிறப்பாக செயல்படுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.இதனால் இறுதி நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
