பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தாம்பரம் புதிய ரயில் பாலத்தை வரும் மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் மிகப் பிரமாண்டமாக பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜனவரி 31 ரயில் இயக்கி ஒத்திகை சரிபார்க்கப்பட்டது. மண்டபம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்ட சென்னை போர்ட் மெயில் ரயில் 22 காலி பெட்டிகளுடன் தூக்குப் பாலங்களை மூடியதும், பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் திறப்பு விழாவில் திறந்து வைப்பதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். திறப்பு விழா நடக்க உள்ள இடங்களை ஆர்.என்.சிங் பார்வையிட்டார், விழாவின் போது பிரதமர் மோடி திறக்கவுள்ள புதிய பாலத்தை, இந்திய ரோந்துக் கப்பலில் இருந்தபடி திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் உயரம் கொண்ட இந்த பாலம்,2078 மீட்டர் நீளம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.கப்பல்கள் கடந்து செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு, பாலத்தின் மையப் பகுதியில் 600 டன் இடையில் செங்குத்து இரும்பு தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலத்தின் அருகில் இரண்டு மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.