கறாராகும் திராவிட மாடலின் சந்தை வரி வசூல்:பீதியில் விவசாயிகள்!கிடங்கு வசதி இல்லை,ஆனால் வரி வசூலில் கறார்!

By : Sushmitha
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இருப்பு வைத்து அதனை சந்தையில் கூடுதலாகத்திற்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக கிடங்கு வசதியும் உள்ளது ஆனாலும் போதிய பொருளாதார வலுவானதாக இல்லாததால் விவசாயிகள் களத்து மேட்டிலேயே தானியங்களை விற்று விடுகின்றனர்
இந்த நிலையில் விவசாயிகள் சந்தையில் விற்கக்கூடிய விளைப் பொருள்களுக்கு தமிழக அரசு சந்தை கட்டணத்தை விதித்துள்ளது. ஒருவேளை விவசாயிகள் இந்த சந்தை கட்டணத்தை செலுத்தாமல் விளைப் பொருள்களை நிலத்திலிருந்து வீடுகளுக்கும் அல்லது கிடங்கில் இருப்பு வைப்பதற்காகவோ விவசாயிகள் கொண்டு சென்றால் அவர்களை வழிமறித்து வேளாண்மை விற்பனை அதிகாரிகள் ஒரு சதவிகித சந்தை வரியை கறாராக வசூல் செய்து வருகின்றனர் இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பாலமாக விளங்கி வந்த விற்பனை கூட அலுவலகங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுத்து வந்தது ஆனால் இந்த பலன் அனைத்துமே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு கிடைத்தது தற்போது முறையான வழிகாட்டுதலும் இன்றி பெயரளவிலேயே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் விளைப் பொருட்கள் வர்த்தகம் நடைபெறுகிறது சந்தை கட்டணம் மூலம் பல கோடி ரூபாயும் வருவாயாக தமிழக அரசு ஈட்டும் இந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் விலை பொருட்கள் சேமிப்பு கிடங்கு உலர் களம் அமைத்து தர வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தெரிவித்துள்ளார்
