ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சி: வெற்றி பெற்ற இந்தியா!

By : Bharathi Latha
புவியியல் அமைச்சகத்தின் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி போல ஆழ்கடல் ஆராய்ச்சியும் முக்கியமானது. சந்திரன் திட்டத்தின் கீழ் தாதுக்கள் நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்தியா கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு 3 பணியாளர்களை 'மத்ஸ்யா 6000, என்ற வாகனத்தில் அவர்களை அனுப்பியுள்ளது. இதற்கு ரூபாய் 4800 கோடி ஒதுக்கி புவி அறிவியல் அமைச்சகத்தின் சிறப்பான திட்டம் ஆகும்.
மத்ஸ்யா 6000 நீர் மூழ்கி இயந்திரம் நீருக்கடியில் ஆராய்ச்சி செய்வதற்காக கோல வடிவில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இது 6.6 மீட்டர் நீளமும் 210 டன் எடையும் 6000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி இயந்திரத்தை இயக்குவதற்காக முன்னாள் கப்பல் படை அலுவலர்கள், இரண்டு நியாட் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும். ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
