இந்தியா - கத்தார் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!
பிரதமர் மோடி கத்தார் அமீர் முன்னிலையில் இந்தியா கத்தார் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ரெண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன் தினம் மாலை இந்தியா வந்தார். அறிய நிகழ்வாக பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்துக்குச் சென்று கத்தார் அமீரை நேரில் வரவேற்றார். அப்போது அவருடன் கைகுலுக்கியும் அவரை ஆர தழுவையும் மோடி தனது அன்பை வெளிப்படுத்தினார். கத்தார் அமீருடன் அந்த நாட்டின் மந்திரிகள் மூத்த அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றும் வந்துள்ளது. இதனிடையே கத்தார் அமீர் டெல்லி வந்தடைந்த சிறிது நேரத்துக்கு பிறகு அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச பிரச்சனைகள் குறித்து கத்தார் அமீருடன் ஜெய்சங்கர் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானிக்கு பாரம்பரிய மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கத்தார் அமீரை ஜனாதிபதி திரௌபதி முர்மு வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியும் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே ஆன நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கத்தார் பாரம்பரிய மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .அமீரை ஜனாதிபதி திரௌபதி முர்மு வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியும் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்தும், இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வர்த்தகம்,முதலீடுகள், தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் மக்கள் இடையேயான உறவுகளில் கவனம் செலுத்தி இந்தியா கத்தார் உறவுகளின் கூட்டணியை உயர்த்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடி கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரியான ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜாஸிம் அல்தானி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். இந்தியா மற்றும் கத்தார் இடையே இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பது மற்றும் வருமானவரி தொடர்பான நிதியை தடுப்பது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கத்தார் பிரதமரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.