அதிகம் பரவும் இன்ப்ளுயன்ஸா நோய் தொற்று: தடுப்பூசி அவசியம்!

By : Bharathi Latha
தமிழகத்தில் இன்ப்ளுயன்ஸா நோய் தொற்று அதிகரித்து வருகிறது இதனால் முதியோர் கர்ப்பிணிகள் குழந்தைகள் பிற நோயாளிகள் ஆகியோர் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மழைக்காலங்களில் ப்ளூ வைரஸ் தொற்றால் இருமல் தொண்டை வலி, ஒவ்வாமை, காய்ச்சல், உடல் வலி,சோர்வு, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை இவ்வைரஸ் ஏற்படுத்தும்.
பலருக்கு மிதமான காய்ச்சலும், சிலருக்கு நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் கட்டாயம் டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.இந்த வைரஸ் ஜனவரி மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் வரக்கூடியது. ஆனால் பருவநிலை மாற்றத்தால் இன்னும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது, இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அலுவலர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.வி என்ற சுவாசப் பாதை தொற்று நோய் பாதிப்புகளுடன் வருவோர்க்கு அலட்சியம் காட்டாமல் இன்ஃப்ளுன்ஸா பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தாக்கத்தை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் முதியோர் கர்ப்பிணியர் 6 மாதம் முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் இன்ஃப்ளுன்சா தடுப்பூசிகளை போட வேண்டும். நோயின் தீவிரத்தை பார்த்து ஓசல்டாமிவிர் என்ற தடுப்பு மருந்தை வழங்க வேண்டும்.
