இந்திய பிரதமர் மோடி மீது இருப்பது மிகுந்த மரியாதை: ஓபன் ஆக மனம் திறந்து பேசிய டிரம்ப்!

இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியது: சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா ரஷ்ய பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்கவில்லை உக்கிரனில் ஐரோப்பா படைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதில் எந்த தவறும் இல்லை அதை நான் எதிர்க்க மாட்டேன் முன்னாள் அதிபர் ஜோ பைடன் கோரை கையாண்ட விதம் சரியில்லை என்றும்,உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் போரை நிறுத்த முடியாது.
இந்த மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளேன்.முக்கியமான ஒப்பந்தங்களில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில் ஒன்று நாடு முழுவதும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மலிவு நிலையில் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டது. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளாம்.
இந்தியாவிற்கு வழங்கும் 182 கோடி ரூபாய் நிதியை அமெரிக்காவின் எலான் மாஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு நிதி உதவி தேவையில்லை. உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, அதிகமாக வரி விதிப்பதால் நாங்கள் அங்கு வியாபாரம் செய்ய இயலாது, இருப்பினும் இந்தியா மற்றும் அந்நாட்டின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.