Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா அர்ஜென்டினா இடையே ஒப்பந்தம்: லித்தியம் கனிமத்தில் வர இருக்கும் வாய்ப்பு!

இந்தியா அர்ஜென்டினா இடையே ஒப்பந்தம்: லித்தியம் கனிமத்தில் வர இருக்கும் வாய்ப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Feb 2025 3:43 AM

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர். சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.


சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL) அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாண அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது. 'லித்திய கனிம வளம் அதிகளவு கிடைப்பதன் மூலம் மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்களைப் பாதுகாப்பதில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நட்பு நாடாக அர்ஜென்டினா உள்ளது.

கேடமார்காவில் கனிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனம், கிரீன்கோ நிறுவனம் ஆகியவற்றின் தற்போதைய லித்தியம் தாது துரப்பண பணிகள் மற்றும் அர்ஜென்டினாவின் சுரங்கத் திட்டங்களில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முதலீடு, நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் மூலம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமத்தை பெறுவதில் உள்ள வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News