Kathir News
Begin typing your search above and press return to search.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  20 Feb 2025 3:15 PM IST

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழலை வலுப்படுத்தும் நடவடிக்கையாக 10,300 கோடி ஒதுக்கீட்டில் 2024 ஆம் ஆண்டில் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான இந்த திட்டம் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் பல்வேறு கூறுகளை ஊக்குவிக்கும் இதை அடுத்து செயற்கை நுண்ணறிவில் இந்தியா புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை இந்த மாற்றத்தின் மையமாக உள்ளது .

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் மூலம் மாணவர்கள் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவின் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க மோடி அரசு பணியாற்றி வருகிறது. இந்திய மொழிகளில் டிஜிட்டல் சேவை மற்றும் இணைய பயன்பாட்டை சுமூகமாக்கி வரும் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவால் வழிநடத்தப்படும் மொழியாக்க தளமான டிஜிட்டல் இந்தியா பாஷினி தனித்துவம் வாய்ந்த சாதனைகளுள் ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பாரத் ஜென் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழி, குறளை அடிப்படையாகக் கொண்டு பொது சேவை விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது .

செயற்கை நுண்ணறிவில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும. இதே போன்று சர்வம் சித்திரலேகா ஆகிய செயற்கை நுண்ணறிவு தளங்களும் மொழி சார்ந்த சேவைகளுக்கு உதவியாக உள்ளன. தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் எவரெஸ்ட் 1.0 செயற்கை நுண்ணறிவு தளம் கிடைக்கிறது. தற்போது 35 மொழிகளில் சேவைகளை வழங்கும் இந்த அமைப்பு முறை விரைவில் 90 மொழிகளாக விரிவுபடுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு குறியீடு 2024 இன் படி செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 2.8 புள்ளிகளுடன் அமெரிக்கா ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு தரும் பயன்பாட்டிலும் 1.7 புள்ளிகள் உடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று என்பது சதவீத நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை உத்தி சார் முன்னுரிமையாக கருதுகின்றன என தெரிவித்துள்ளது. இது உலகளாவிய சராசரியான 75 சதவீதத்தை விட அதிகமாகும். 69 சதவீதம் இந்திய நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் தங்களது தொழில் நுட்ப முதலீடுகளை அதிகரிக்க திட்டமிடுவதாகவும் மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள் 25 மில்லியன் டாலரை செயற்கை நுண்ணறிவு முயற்சிகளுக்கு ஒதுக்க இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

ராண்ட்ஸ்டாடு மற்றும் பங்கு அறிக்கை 2024 இன் படி இந்தியாவின் பணியிடங்களில் 10 ஊழியர்களின் ஏழு பேர் ஏதேனும் ஒரு வகையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 5 பேர் என இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.ஐந்தாம் ஆண்டில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் துறை 45 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் 28.8 பில்லியன் அமெரிக்க டாலரை எடுத்தோம் என இந்திய திறன்கள் அறிக்கை கணித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன் மிக்க தொழிலாளர் எண்ணிக்கை 2016 முதல் 2023 வரை 14 மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் சிங்கப்பூர், பின்லாந்து ,அயர்லாந்து மற்றும் கனடாவுடன் வேகமாக வளரும் சிறந்த ஐந்து செயற்கை நுண்ணறிவு திறமை முனையங்களுள் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News