Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் குழந்தைகளுக்கான மகத்தான சேமிப்பு திட்டம்: மோடி அரசின் புதிய முயற்சி!

பெண் குழந்தைகளுக்கான மகத்தான சேமிப்பு திட்டம்: மோடி அரசின் புதிய முயற்சி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Feb 2025 8:34 PM IST

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்குவ தற்காக சிறப்பு மேளா வரும் 21. 28 மற்றும் மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது. இத்திட்டத் தின் கீழ் இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அஞ்சல் துறை சார்பில் சுகன்யா சம்ரித்தி எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்காக. 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. இத்திட்டத் தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கு வதற்கு வசதியாக, வரும் 21. 28 மற்றும் மார்ச் 10 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு மேளாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும்.


சென்னை நகர அஞ்சல் மண்ட லத்தின் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை இத்திட்டத்தில் 10 லட்சம் சேமிப்புக் கணக்கு கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.8,351 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். இந்த சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News