ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள்:சிரமத்திற்குள்ளான கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள்!

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் தங்கள் இயல்பு சேவையை வழங்காமல் மக்களை பெருமளவு சிரமப்படுத்தி உள்ளது
அதாவது கிட்டதட்ட 893 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதால் சென்னைக்கு அழைக்கப்பட்டனர் இப்படி அதிக மருத்துவர்கள் ஒரே நேரத்திற்கு சென்னைக்கு சென்ற காரணத்தினால் மருத்துவர்களை காண ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்ற நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி மீண்டும் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
மருதம்புதூர் உள்ளிட்ட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரும்பு சத்து மருந்து வாங்குவதற்காக வந்த கர்ப்பிணி பெண்கள் கூட மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் பணியில் இருந்த ஊழியர்களால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்பதை முன்கூட்டியே நோயாளிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டிய தகவலையும் தெரிவிக்காததால் இந்த சிரமம் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை பெருமளவு பாதித்துள்ளது
மேலும் திருநெல்வேலி தென்காசி சேலம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுகாதார சேவைகளுக்கும் இதேநிலை தான் ஏற்பட்டுள்ளது!