போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்: வழி மாறிப்போகும் தமிழக இளசுகள்!

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அவர்களிடம் 6 பாக்கெட் கஞ்சாவும், 50 போதை மாத்திரைகளும் இருந்தது, தெரியவந்தது.அவர்கள் 3 பேரும் தூத்துக்குடி, அமுதா நகரைச் சேர்ந்த ரூபக் ராஜேஷ் , லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிம்சான்ராஜ், அண்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.
இவர்களில் ரூபக் ராஜேசும், சிம்சான் ராஜூம் கல்லூரியில் பி.காம் படித்து வருகின்றனர். வெங்கடேஷ் பிகாம் முடித்துள்ளார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேருக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்த தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பிடிக்கப்பட்ட இவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.