பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் பயன் பெரும் வகையில் கடன் வழங்குவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிப்பு!

இந்தியாவில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களில் முதலீடு என்பது மிகக் குறைவான முதலீடு என்றாலும் 74 சதவீத மக்களுக்கு உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது இருப்பினும் இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தாத நிலையில் உள்ளதால் முறைப்படுத்துவதற்காகவும் புதிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை அமைக்கவும் ஏற்கனவே இயங்கி வருகின்ற நிறுவனங்களை மேம்படுத்தவும் ஆத்மநிர்பர் பாரத் அபியன் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குரு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் தொழிலை மேற்கொள்ளும் குறு நிறுவனங்களுக்கும் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு விரிவாக்கம் அடையும் பொழுதும் மானியம் வழங்கப்படுகிறது அதன்படி மகளிர் குழு தனி நபர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு குழு நிறுவனங்களை தொடங்குவதற்காக இயந்திர தளவாடங்கள் திட்ட மதிப்பில் 35 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கடன் வழங்குவதற்கான கால அவகாசத்தை வருகின்ற 2026 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது அதாவது 2024 அக்டோபர் மூன்றாம் தேதி வரை 805 விண்ணப்பதாரர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது இதில் கடலூர் மாவட்டத்தில் 132 பேருக்கும் விழுப்புரத்தில் 63 பேருக்கும் சேலத்தில் 55 பேருக்கும் மிக அதிகபட்சமாக கடன் வழங்கப்பட்டுள்ளது இவர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு 31 மார்ச் 2026 ஆம் தேதி வரை நீடித்துள்ளது அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கும் 12000 குழு நிறுவனங்களுக்கு கடன் வழங்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது