சதம் அடித்த இஸ்ரோ,ஏஐ துறையிலும் வளரும் பாரதம்:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

பிப்ரவரி 23 பிரதமரின் 119 வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது இதில் பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட்டில் சதம் அடிக்கும் பொழுது நமக்கு ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம் ஆனால் அதைவிட பெரு மகிழ்ச்சியை கடந்த மாதம் இஸ்ரோ கொடுத்துள்ளது
அதாவது கடந்த மாதம் இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்து உள்ளது இதனால் விண்வெளியிலும் நமது பாரதம் சதம் அடித்திருக்கிறது சந்திரயான் மங்கல்யான் ஆதித்யா எல்-1 ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் என பல வரலாற்று சாதனைகளை படைத்த இஸ்ரோ கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 460 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது
நமது நாடு விண்வெளி துறையை போன்று மற்றும் ஒரு துறையிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது அதுதான் செயற்கை நுண்ணறிவு துறை சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் கலந்து கொண்டேன் அங்கு நமது பாரத நிபுணர்களின் செயற்கை நுண்ணறிவு படைப்புகள் என்னை மிகவும் வியப்படையச் செய்தது என்று பேசினார்
மேலும் ஆசிய சிங்கம் ஹன்குல் பிக்மி ஹாக்ஸ் சிங்கவால் குரங்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது இவை நம் உலகின் வேறு எங்குமே இல்லை நமது தேசத்தில் மட்டும் தான் உள்ளது அதனால் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை கூறிய பிரதம நரேந்திர மோடி வரவுள்ள மகளிர் தினத்தை ஒட்டி பிரதமரின் சமூக வலைதள பக்கங்கள் மகளிருக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்