Kathir News
Begin typing your search above and press return to search.

மிகப்பெரிய ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா: தமிழக கவர்னர் அறிக்கை!

மிகப்பெரிய ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா: தமிழக கவர்னர் அறிக்கை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Feb 2025 5:14 AM

தமிழக கவர்னர் மற்றும் பாஜக தலைவர் ஆகியோர் மகா கும்பமேளாவில் புனித நீராடினர்.உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜியில் கடந்த கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர். இந்நிலையில் தமிழக கவர்னர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.


கவர்னர் அறிக்கையில் கூறும் போது, உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோடிக்கணக்கான இந்துக்கள் பிரயாக்ராஜில் புனித தீர்த்தமான திவ்ய, பவ்ய மகா கும்பத்தில் புனித நீராடினர். நமது மாபெரும் தேசமான பாரதத்தின் வளத்துக்காக வேண்டி வழிபட்டேன் இங்கு காற்றில் பரவியுள்ள எதிர்மறை சக்தி அனைவரையும் ஆழமாக தொட்டு மற்றவர்களுடன் இணைக்கிறது. கோடான கோடி மனிதர்கள் ஏற்கனவே புனித நீராடி, இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான தர்ம திருவிழாவில் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


இன்னும் ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புனித நீராட வேண்டும் வாழ்வில் ஒருமுறையாவது. இது மறுமலர்ச்சி அடைந்த பாரதத்தின் சான்றாகும். பாஜக தலைவர் அண்ணாமலை பதிவில் கூறும் போது, மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளாவில் பங்கேற்று, பிரயாக்ராஜில் உள்ள புனித திருவிழா சங்கமத்தில் புனித நீராடியது பாக்கியம் பெற்றதாக கருதுகிறேன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News