சுரங்கத்துக்குள் சிக்கிய எட்டு பேரை மீட்கும் பணி: மீட்பு பணியில் அதிதீவிரமும் அக்கறையும் காட்டும் பிரதமர் மோடி !
தெலுங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கத்துக்குள் சிக்கி உள்ள எட்டு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தெலுங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்த் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 4 இலட்சம் ஏக்கர் பாசனத்திற்கு நீரை கொண்டு செல்வதற்காக 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு உலகின் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 9.50 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் மட்டுமே இனி பாக்கி உள்ளது .சில நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்த பணிகளில் ஈடுபட்டிருந்த இன்ஜினியர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 50 பேர் நேற்று முன்தினம் காலையில் சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காக சுரங்கத்துக்குள் சென்றனர்.
நீண்ட எந்திரத்துடன் அவர்கள் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்ற நிலையில் திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதை பார்த்ததும் 42 பேர் உடனடியாக சுரக்கத்திலிருந்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 8 பேர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் இரண்டு பேர் என்ஜினியர்கள் ஆவார்கள் .அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.அதன்படி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மட்டுமே மீட்பு பணிகளை தொடங்கினர். அவர்களுடன் ராணுவம் மற்றும் சுரங்க பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் ஊழியர்களும் இணைந்து தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.
இந்த மீட்பு பணிகள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. மீட்பு குழுவினர் சுரங்கத்துக்குள் சுமார் 13 கிலோமீட்டர் வரை சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களின் பெயரைச் சொல்லி அழைத்தனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் இடத்தின் அருகில் மீட்பு குழுவினர் சென்று விட்டதாகவும் எனினும் தொழிலாளர்கள் இருக்கும் இடம் குறித்து எந்தவித தடயமும் கிடைக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சுரங்க விபத்து தொடர்பாக அரவிந்த் ரெட்டியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி தொழிலாளர்களை மீட்பதற்காக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.