தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்ததற்கான சிறப்பான நோக்கம் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்!
தேசிய கல்விக் கொள்கையை எதற்காக கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து வாரணாசியில் நடந்த காசி தமிழ்ச்சங்க விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் வாரணாசி இந்து பல்கலைக்கழக வளாகத்தில் உலகளவில் ஆன பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலக அளவில் ஏற்படும் பெரிய சவால்களை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்பிப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். விண்வெளித் திட்டத்தில் முன்னேற வேண்டும், டுரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா பங்கு அதிகரிக்க வேண்டும்.பிரான்ஸ் நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த ஒரு மாநாட்டை பிரதமர் நடத்தி விட்டு வந்துள்ளார் .எப்படி பண்டைய கலாச்சாரம் ,வரலாறு, தொழில்நுட்பத்தை இணைக்கலாம் என்பது குறித்து நாங்கள் திட்டமிட்டு செயலாற்றி புதிய இந்தியாவை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.
ஏன் இந்தியா எளிமையான நாடாக இருக்கிறது என்றால் எளிமையான மக்கள் அவருடைய கலாச்சாரம் மதிப்பு போன்றவை இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமைக்கு காரணமாக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் காசியில் தமிழ் சங்கமம் நடத்துவது போல் ராமேஸ்வரத்தில் கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்படுமா? என்று கேட்டார். அதற்கு ஜெய்சங்கர் உங்களுடைய யோசனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். விழாவில் 45 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கலந்து கொண்டனர்.