தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் பழக்கம்: மெத்தம் பெட்டமைன் வைத்திருந்த இளைஞர் இருவர் கைது!

By : Bharathi Latha
சென்னையில் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கார், கைப்பேசி உள் ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு கிடைத்த தகவ லின்படி, காதர் நவாஸ்கான் தெருவில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக காரில் வந்த 2 நபர்க ளைப் பிடித்து சோதனையிட்ட போது, அவர்களிடம் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர்களிடமிருந்த போதைப் பொருளை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.
விசரணையில் அவர்கள், கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரி நாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து கார் மற்றும் விலை உயர்ந்த கைப்பேசியையும் பறி முதல் செய்தனர்.
