தமிழகத்துக்கு மும்மொழி தேவை: வெளிநாட்டு அறிஞர்கள் கருத்து!

By : Bharathi Latha
கோவையில் ஈச்சனரியில் உள்ள ரத்தினம் கல்லூரி அரங்கில் நேற்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் தமிழகத்திற்கு முன்மொழி தேவை என கருத்தை தெரிவித்தனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ்மொழி சார்ந்து ஆய்வுப்பணிகளை செய்து வரும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களிடம் தமிழ்நாட்டின் முன்மொழி திட்டம் பற்றி கேட்டு பொது அளித்த பதில்கள் இதோ, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யா கூறும் போது, நம் தாய் மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்துக்கு அது மட்டும் போதாது பிற மொழிகலும் கற்றுக் கொள்வது அவசியம். மத்திய அரசு வலியுறுத்தும் மும்மொழி திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று. இன்னொரு மொழியை படிப்பதனால் நம் கலாச்சாரம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும்.
லண்டனனச் சேர்ந்து செல்ல தம்பி கூறும் போது, லண்டனில் உள்ள என் குழந்தைகளுக்கு பிரெஞ்சு,ஜெர்மன் சீன மொழிகள் நன்றாக தெரியும். பிற்காலத்தில் அந்த நாட்டில் உயர் பதவிகளுக்கு கூட வரலாம். இது அவர்கள் பொருளாதாரம் சார்ந்து வளர்ச்சி அடைய உதவும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி திட்டம் தேவைதான் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதே நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பின் பேசிய தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழி போராட்டம் வேண்டும் எனவும், மும்மொழி திட்டத்தை வரவேற்று பேசிய அதே நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் முரணாக பேசியது நிகழ்ச்சி பங்கேற்றவர்களிடையே குழப்பத்தை வரவழைத்தது.
