Kathir News
Begin typing your search above and press return to search.

முழு உலகமும் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரிது: மோடி பெருமிதம்!

முழு உலகமும் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கை  பெரிது: மோடி பெருமிதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2025 5:01 PM IST

முழு உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார். மத்திய பிரதேசம் மாநிலம் கோபாலில் நடந்த 2025 ஆம் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அவரை மாநில முதல்வர் மோகன் யாதவ் வரவேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறும் போது, இந்தியாவின் மின்சார வாகனப் புரட்சியில் முன்னணி மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது.


உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆக இந்தியா விளங்குகிறது. ஜவுளி சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறையில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இங்கு கூடியுள்ளது பெருமை அளிக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முழு உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது.

மத்திய பிரதேசம் ஒரு வணிக இடமாக மாறி வருகிறது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாக உள்ளது இவ்வாறு அவர் பேசினார். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பதால்,என் வாகனத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையை மூடப்பட்டால் குழந்தைகள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு சற்று தாமதம் ஏற்படலாம். அவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைய நான் நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்தேன். இதனால் அனைவரும் மன்னிக்கவும் என மாநாட்டில் அனைவரிடமும் மன்னிப்பு கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News