Kathir News
Begin typing your search above and press return to search.

பாரத்மாலா திட்டத்தின் கீழ் தயாராகும் கேஷ்கல் சுரங்கப்பாதை! தென்னிந்தியா-சத்தீஸ்கர் இணைப்பு!

பாரத்மாலா திட்டத்தின் கீழ் தயாராகும் கேஷ்கல் சுரங்கப்பாதை! தென்னிந்தியா-சத்தீஸ்கர் இணைப்பு!
X

SushmithaBy : Sushmitha

  |  25 Feb 2025 1:31 PM



சத்தீஸ்கர் மற்றும் தென்னிந்திய இடையேயான இணைப்பை மிக எளிதாக மாற்றும் கேஷ்கல் சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் தீவிரமாக விரைவான வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இந்த சுரங்க பாதையின் முக்கிய நோக்கம் ராய்ப்பூருக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து வெறும் ஏழு மணி நேரமாகக் குறைப்பதே இந்த லட்சிய முயற்சியின் நோக்கமாகும் மேலும் இப்பகுதி போக்குவரத்து மற்றும் வளர்ச்சியை நீண்ட காலமாகப் பாதித்து வரும் கடினமான மலைச் சாலைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் திறமையான விருப்பத்தை வழங்குகிறது

பாரத்மாலா திட்டத்தின் கீழ் ராய்ப்பூரை விசாகப்பட்டினத்துடன் இணைக்கும் 464 கி.மீ நீளமுள்ள ஆறு வழி விரைவுச் சாலையின் ஒரு முக்கியப் பகுதியாக இந்தச் சுரங்கப்பாதை அமைகிறது ஏனென்றால் பல தலைமுறைகளாக சுற்றுலாப் பயணிகள் பஸ்தாரின் கரடுமுரடான பள்ளத்தாக்கு சாலைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்

இதனால் இந்த சுரங்கப்பாதை விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் இதனால் அவர்கள் தென்னிந்தியாவின் பெரிய சந்தைகளுக்கு விவசாய விளைபொருள்கள் வனப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை அனுப்ப முடியும் 2.79 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையின் கட்டுமானம் அசல் திட்டத்தின்படி இந்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News