உற்பத்தி மையமாக மாறும் இந்தியா: பிரதமர் மோடி நம்பிக்கை!

By : Bharathi Latha
அசாம் மாநிலம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்து பின்னர் நிகழ்ச்சியில் பேசியனர். அசாம் மாநிலம் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறி உள்ளது. அரசியல் நல்லாட்சி மற்றும் சீர்திருத்தங்களை இந்தியாவின் மீதான உலக நம்பிக்கை அதிகரிக்க காரணம்.
அசாம் மாநிலம் விரைவில் வடகிழக்கு மாநிலங்களுக்கெல்லாம் உற்பத்தி மையமாக விளங்கும். உலகளாவிய தலைமைக்கு மத்தியில், இந்தியா பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பாஜக ஆட்சியின் போது அசாம் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ரூபாய் 6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் செழிப்பிற்கு கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களும் வலிமை காட்டி வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மக்கள் சரியாக செல்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. தற்பொழுது இந்தியா உற்பத்தி துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இந்த அரசியல் மாற்றம் கண்டிப்பாக நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கை மக்களிடையே பிறந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
