இந்தி கற்றுக் கொள்பவர்கள் புத்திசாலிகள்,தமிழகத்தில் இந்தி தெரியாமல் இருப்பது பெரிய குறை-ஜோஹோ சிஇஓ!

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கிறது என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் கூட புதிய கல்விக் கொள்கையின் வழியாக இந்தி திணிக்கப்படுகிறது என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார் இந்த நிலையில் ஜோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு இந்தியாவில் ஜோஹோ வேகமாக வளர்ந்து வருகிறது இதனால் தமிழ்நாட்டில் கிராமப்புற பொறியாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறார்கள்
தமிழ்நாட்டில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பாக சேவை செய்வதையே சார்ந்துள்ளது அதனால் இந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு பெரிய குறை தான் எனவே இந்தி கற்றுக் கொள்வது எங்களுக்கு புத்திசாலித்தனம் நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியை இடைவிடாமல் படித்து வருகிறேன் இப்பொழுது பேசப்படும் விஷயங்களில் 20% என்னால் புரிந்து கொள்ள முடியும்
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதரமாக இந்திய பொருளாதாரம் இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் இந்தி கற்றுக் கொள்வதில் புத்திசாலிகளாக இருப்பார்கள் ஆகவே அரசியலைப் புறக்கணித்து மொழியை கற்றுக் கொள்வோம் என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்