வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா:ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஒழுங்கு முறைப்படுத்த வகைசெய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை கடந்த குளிர்கால கூட்ட தொடரின் போது மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்தது
இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த காரணத்தினால் பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டு இந்த மசோதா ஆய்விற்கு அனுப்பப்பட்டது பாஜகவின் மூத்த தலைவர்கள் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு கடந்த ஆறு மாதங்களாக பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும் வக்பு சொத்துக்கள் தொடர்புடைய நபர்களையும் சட்ட வல்லுநர்களையும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் கருத்துக்களை எடுத்துள்ளது
இதனை அடுத்து வக்பு மசோதா தொடர்பாக 14 சட்ட திருத்தங்களுக்கு பார்லிமென்ட் கூட்டு குழு ஒப்புதல் அளித்தது மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு இது தொடர்பான அறிக்கையை பார்லிமென்டல் தாக்கல் செய்தது இந்த நிலையில் மத்திய அமைச்சரவை வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லிமென்ட் கூட்டு குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
இதனால் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது