இந்திய பிரதமர் ரஷ்ய பயணம்: எதற்காக தெரியுமா?

By : Bharathi Latha
இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மே மாதம் 9ம் தேதி இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் ராணுவ பேரணி நடைபெற இருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் ராணுவ வீரர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி இந்தியா சார்பாக பங்கேற்க இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் நடக்கும் பேரணியில் இந்திய ராணுவமும் கலந்து கொள்ள இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த பேரணிக்காக பயிற்சி மேற்கொள்ள, ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய ராணுவம் ரஷ்யா செல்ல இருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கு கொள்ள பிரதமர் மோடி ரஷ்யா சென்றது குறிப்பிடத்தக்கது.
