அனைத்து கட்சிகள் கூட்டம் என்பது தமிழக முதல்வர் நடத்தும் நாடகம்-வானதி சீனிவாசன்!

கோவை காந்திபுரம் பகுதியில் வளம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினருக்கான நிதி மேலாண்மை பயிற்சி நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் மத்திய உள்துறை அமைச்சர் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்த பின்னரும் தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகத்தை மாநில முதல்வர் நடத்துவதற்கு தயாராகி வருகிறார் என தெரிவித்துள்ளார்
அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அரசாங்க துறைகளிலும் பல மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார் உலக சூழலுக்கேற்ப கல்வி திட்டத்திலிருந்து அரசாங்கத்தின் உடைய பல்வேறு கொள்கை முடிவுகள் வரை பெரிய மாற்றத்தை இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தியும் அமல்படுத்தியும் வருகிறது
தமிழகத்தில் தற்போது நிலைமை வருகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு போன்றவற்றை மறை மாற்றவே தமிழக முதல்வர் தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார்