பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழை கோர்ட்டில் காட்ட தயார்: பல்கலைகழகம் அதிரடி!

By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம், ஆனால் மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சை எழுந்தது, நீரஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய தகவல் கமிஷன் 2016இல் உத்தரவை ஒன்று பிறப்பித்தது அதில் 1978 இல் பட்டப்படிப்பு முடித்த அனைவரின் தகவல்களையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மற்ற தகவல்களை தருவதற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் பிரதமரின் பாதுகாப்பு கருதி மற்ற தகவல்களை அனைவருக்கும் அளிக்க முடியாது என டெல்லி பல்கலைக்கழகம் கூறியது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தகவல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்து 2017ல் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நேற்று நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்,டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978 இல் பிரதமர் பி.ஏ. பட்டம் பெற்றார். இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளம். ஆனால் அதே நேரத்தில் பாதுகாப்பு கருதியும் பிரதமரின் தனிநபர் சுதந்திரத்தின் கருதியும் இந்த தகவலை மற்றவர்களுக்கு தர முடியாது என குறிப்பிட்டிருந்தார் இதனால் வளர்க்கும் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
