செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா பெற்றுள்ள இடமும்முன்னேற்றமும்!
ஏ.ஐ தொழில்நுட்பம் என அழைக்கப்படும் செயற்கை தொழில்நுட்பத்தில் டாப் 10 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் டாப் டென் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தென்கொரியா ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் மற்றும் புதிதாக நிதியளிக்கப்பட்ட ஸ்டார்ட்டப்புகள் உள்ளன. இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி சரிசமமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா பல அம்சங்களில் சிறந்து விளங்கினாலும் ஏ. ஐ தனியார் முதலீட்டை ஈர்ப்பதிலும் அதிக எண்ணிக்கையிலான குறிப்பிடத்தக்க எந்திர கற்றல் மாதிரிகள் உருவாக்குவதிலும் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி காப்புரிமையில் முன்னணியில் இருப்பதிலும் சீனா சிறந்து விளங்குகிறது என்று ஸ்டான்போர்ட் என்ற தெரிவித்துள்ளது. ஸ்டான்போர்ட் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து இந்தியா முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் ஐக்கிய அரபு நாடுகள்,பிரான்ஸ், தென்கொரியா,ஜெர்மனி, ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.