இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கனரக லாரி - போக்குவரத்தில் மத்திய அரசின் புதிய முயற்சி!
டெல்லியில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கனரக லாரியை மத்திய மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி ,புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்தி மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைட்ரஜனால் இயங்கும் கனரக லாரிகளின் முதல் சோதனை ஓட்டத்தை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி ஹைட்ரஜன் எதிர்காலத்தின் எரிபொருளாகும். இது உமிழ் வை குறைப்பதன் மூலமும் எரிசக்தியில் தன்னிறைவு மேம்படுத்துவதன் மூலமும் இந்தியாவின் போக்குவரத்து துறையை மாற்றியமைக்கும் மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது.
இத்தகைய முயற்சிகள் கனரக லாரி போக்குவரத்தில் நிலையான இயக்கத்திற்கு மாறுவதை துரிதப்படுத்தும் என்றார்.மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசும்போது தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.இந்த முயற்சி உலகளாவிய காலநிலை இலக்குகளுக்கு பங்களிக்கும். அதே வேளையில் புதுமைகளை இயக்குவதற்கும் இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அடைவதற்கும் நமது உறுதிபாட்டை பிரதிபலிக்கும் என்று கூறினார். ஹைட்ரஜன் கனரக லாரியின் இந்த சோதனை ஓட்டம் 24 மாதங்கள் வரை நீடிக்கும்.இது மும்பை, புனே, டெல்லி, சூரத் வதோதரா, ஜாம் ஷெட்பூர் மற்றும் கலிங்கநகர் உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான சரக்கு வழித்தடங்களில் சோதிக்கப்படும்.