Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய வனவிலங்கு சரணாலயம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

புதிய வனவிலங்கு சரணாலயம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 March 2025 8:44 PM IST

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் வன்தாரா என்ற பெயரில் வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆனந்த் அம்பானி இந்த மையத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீட்டா அம்பானி அவர்களது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். ஒட்டகச்சிவிங்கி சிங்கக்குட்டிகள், மான் உள்ளிட்ட மிருகங்களுக்கு பிரதமர் மோடி உணவளித்து மகிழ்ந்தார்.


இங்கு கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ (MRI),சி.டி. (CT)மற்றும் ஐ.சி.யூ (ICU) உள்ளிட்ட வசதிகளை கால்நடை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பிரதமர் மோடி பார்வையிட்டார். அம்பானியின் கனவு திட்டமான வன்தாராவில் உயிரியல் நிபுணர்கள் உட்பட 2100 பேர் பணியாற்றுகின்றனர். வனவிலங்குகள் நலத்தை பாதுகாக்கும் அதேநேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மையத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இது ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு 43 வகை உயிரினங்கள் 2000 வனவிலங்குகள் பராமரிக்கப் படுகின்றன. இது இயற்கையான வனவிலங்கு வாழ்விடம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கென தனி மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News