யார், யார் தே.ஜா கூட்டணியில் இருப்பார்கள்: அண்ணாமலை வைத்த செக்.!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு நேரம் உள்ளது. எந்தெந்த கட்சி கூட்டணியில் இருக்கும் என்று அறிவிப்பு குறித்து நேரம் வரும்போது வெளியிடுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பொதுக்கூட்டம் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருச்சியில், நெல்லை,வேலூர் காஞ்சிபுரம், சேலம்,சென்னை,மதுரை மற்றும் கோவையில் நடைபெறும்.
போட்டி அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது மக்களின் விருப்பத்திற்கும் நலனுக்காக மட்டுமே சமுதாய இயக்கமாக கொண்டு செல்கிறோம். தமிழகத்தில் புதிய ஆட்சி வரும்போது புதிய கல்விக் கொள்கை அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கும். இது தேஜா கூட்டணி ஆட்சி அமையும் போது நடக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு அமைய வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு இதை பிரதமர் மோடி கடுமையாக எதிர்க்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்கு நடைபெற்றது என்று தெரியவில்லை. மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற்றது.
தேஜா கூட்டணி எப்படி இருக்கும் எந்தெந்த தலைவர்கள் கட்சிகள் இருக்கும் என நேரம் வரும்போது சொல்கிறோம். காசி தமிழ் சங்கத்தின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியின் போதும் பிரதமர் மோடி நேரடியாக அழைப்பு விடுத்தும் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ் பெயர்களில் ஏன் ரயில்கள் கொண்டு வரப்படவில்லை இருந்தும் அவர்கள் பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சனம் செய்யவே முயற்சி செய்கின்றனர் என கூறினார்.