மருத்துவத்துறையில் புரட்சி செய்ய காத்திருக்கும் மோடி அரசு: குவியும் பாராட்டு.!

By : Bharathi Latha
அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவ துறையில் 75 ஆயிரம் இடங்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார். இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசும் போது, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கும், முதலீட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதே மாதிரி திறன் மேம்பாடு மற்றும் புதுமையான முன்னெடுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ ஆராய்ச்சிக்காக தேசிய அளவில் பெரிய மொழி மாதிரி (large language model - LLM) ஆய்வகம் அமைக்கப்படும். இந்தத் துறையில் முதலீடு செய்ய மக்கள் அனைவரும் முன் வர வேண்டும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐஐடி கல்வி விரிவாக்கம் கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, ஏ.ஐ யின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது மற்றும் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது, 22 இந்திய மொழிகளில் பாடங்களை கிடைக்கச் செய்வது என பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐடிஐ களை மேம்படுத்துவதுடன் திறமைக்கான மையங்களையும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்ய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். இந்த பட்ஜெட்டில் மருத்துவ படிப்பில் கூடுதலாக பத்தாயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ துறையில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
