மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டெல்லி பாஜக அரசு!

சர்வதேச மகளிர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிற நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக அரசு பெண்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கும் பெண்களுக்கான செழிப்பு திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்
மேலும் தேர்தலின் பொழுது நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 2,500 வழங்குவதற்கான திட்டத்திற்கு இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்கு டெல்லி பட்ஜெட்டில் ரூபாய் 5,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் அதோடு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்கான பிரத்தியேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்