சரக்கு போக்குவரத்து துறையில் கலக்கும் மோடி அரசு!

By : Bharathi Latha
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா இன்று வெளியிட்டார். இந்த ஆய்வு, "இந்தியாவில் காலநிலைக்கு உகந்த பசுமை சரக்கு போக்குவரத்து பசுமை சரக்கு திட்டம்" என்ற இந்தியா-ஜெர்மன் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், டச்சே செசல்சாஃப்ட் ஃபர் இன்டர்நேஷனல் ஸுசார்மென்னார்பிட் அமைப்புடன் இணைந்து தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் தளவாடத் துறையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய கருத்துகள் மற்றும் உத்திகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்கள் பங்கேற்பின் தற்போதைய நிலையை இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. அவர்கள் சேர்க்கப்படுவதைத் தடுக்கும் முக்கிய சவால்களை இது பகுப்பாய்வு செய்கிறது. வேகமாக வளர்ந்து வரும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பாலின பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்து உள்ளது. இத்துறையின் வளர்ச்சி 2025ம் ஆண்டுக்குள் 380 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டு நிகழ்வில் பேசிய அமர்தீப் சிங் பாட்டியா, தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு அரசின் தொலை நோக்குப் பார்வையின் பின்னணியில் இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் கருத்துகளை மாற்றுவதிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கல்வியின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார்.
