வனவிலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா முன்னணி: பிரதமர் பெருமிதம்!

By : Bharathi Latha
வனவிலங்குகளை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.9வது புலிகள் காப்பகம் மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சியால் இந்தியா தொடர்ந்து முன்னேற்றங்களை கண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 9-வது புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது, இது குறித்து அறிவிப்பதில் ஆனந்த மகிழ்ச்சி.இந்த வளர்ச்சிக்கு பாடுபடும் நமது வனத்துறை அதிகாரிகளையும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் நான் வாழ்த்துகிறேன்.நமது வனத்துறை அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகள் தான் இதற்கு காரணம் அவர் கூறியிருந்தார்.
இதற்குப் பிரதமர் மோடி அளித்துள்ளோம் பதில் : இந்தியா வனவிலங்கு கொண்டாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. வனவிலங்குகளை பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இந்தியா இருக்கும். இது வனவிலங்கு பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
