நான் பெரிய செல்வந்தன்: பிரதமர் மோடி பெருமிதமாக கூற காரணம் என்ன?

By : Bharathi Latha
குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியது, ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகங்களை,தன்னம்பிக்கையை மற்றும் தைரியத்தையும் பெறுவது நமக்கு முக்கியம்.
எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் ஜனாதிபதியாக நம் நாட்டில் இருக்கிறார். ஆயிரக்கணக்கான கழிப்பறைகளை கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்துள்ளோம். புதிய பார்லிமெண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களை வழிபடுத்துவதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு.
நான் உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். கோடிக்கணக்கான தாய்மார்கள்,சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசிர்வாதங்கள் எனக்கு இருப்பதால்தான் உலகின் மிகப்பெரிய செல்வந்தனாக இருக்கிறேன். தினமும் இந்த ஆசீர்வாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பெண்களிடமிருந்து ஏதாவது ஒன்றை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய நாள், இவ்வாறு அவர் பேசினார்.
