Kathir News
Begin typing your search above and press return to search.

மன்மோகன்சிங் நினைவிடம் தொடர்பாக மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை ஏற்றுக் கொண்ட குடும்பம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்கான இடம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்தது.

மன்மோகன்சிங் நினைவிடம் தொடர்பாக மத்திய அரசு  ஒதுக்கிய இடத்தை ஏற்றுக் கொண்ட குடும்பம்!
X

KarthigaBy : Karthiga

  |  9 March 2025 7:00 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்கான இடம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்தது. அரசு ஒதுக்கிய இடத்தை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு டெல்லி நிஹாம்போத் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடந்தன. பொது சுடுகாட்டில் இறுதி சடங்குகள் நடத்துவதா என்று காங்கிரஸ் கட்சி ஆட்சேபனை தெரிவித்தார்.

மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டும் இடம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது.முன்னாள் ஜனாதிபதிகள் முன்னாள் பிரதமர்கள் பலரது நினைவிடங்கள் அமைந்துள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டதுமன்மோகன் சிங் குடும்பத்தினர் விரும்பிய இடத்தை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்தது .இந்நிலையில் மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை மன்மோகன் சிங் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு கடிதம் எழுதி தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். மேலும் மன்மோகன் சிங்கின் மூன்று மகள்களும் அவர்களுடைய கணவன்மார்களும் அந்த இடத்தை நேரில் பார்த்துள்ளனர். இதனால் இது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய இடம் 9000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நினைவிடம் அருகே உள்ளது. அடுத்த நடவடிக்கையாக மன்மோகன் சிங் நினைவாக ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கும். அதில் உறுப்பினர்களாக யார் யாரை நியமிப்பது என்று மன்மோகன் சிங் குடும்பத்தினர் தெரிவிப்பார்கள்.அடுத்த நடவடிக்கையாக அறக்கட்டளை பெயருக்கு நிலத்தில் உரிமையை மத்திய அரசு மாற்றம் செய்யும். அதை தொடர்ந்து நினைவிடம் கட்ட மத்திய அரசு ரூபாய் 25 லட்சம் மானியத்தை விடுவிக்கும். கட்டுமான பணியில் ஈடுபட உள்ள மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News