ஸ்பேஸ் எக்ஸ் டிராகனில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:நாசா அறிவிப்பு!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் கடந்த வருடம் ஜூன் 5ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளி நிலையம் சென்று அங்கு கிட்டத்தட்ட எட்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்புவதாக சென்றிருந்தார் இவர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாற்றி வருகிறார் மேலும் ஏற்கனவே இரண்டு முறை விண்வெளி நிலையத்திற்கும் சென்று வந்தவர் சுனிதா வில்லியம்ஸ்
இவருடன் பேரி வில்மோரும் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார் எட்டு நாட்களில் திரும்புவதாக மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம் கிட்டதட்ட ஒன்பது மாதங்களாக நீண்டு கொண்டே சென்றுள்ளது அதாவது ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது இதனால் அவர்கள் சுமார் 9 மாதங்களாக விண்வெளி மையத்திலேயே தங்கி வருகின்றனர்
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி எலன் மாஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது