கதவு தொங்கியவாறு ஆபத்தான நிலையில் அரசு பேருந்து: பயணிகள் அச்சம்!

By : Bharathi Latha
நாகர்கோவிலில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கியவாறு ஆபத்தான நிலையில் அரசு பேருந்து இயக்கப் பட்டது. இதனால் பயணிகள், வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். படிக்கட்டில் நின்று பயணிகள் பயணம் செய்தால் விபத்துகள் ஏற்படக்கூடும் என, அரசு பேருந் துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தானியங்கி கதவுகளுடன் புதிய பேருந்துகள் இயக்கப் படுகின்றன.இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பகுதியில், பின் புற தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கிய நிலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
மேல்பகுதி உடைந்து கீழ்பகுதியில் மட்டும் சிறிது பிடிமானத்தோடு கதவு தொங்கிய நிலையில் இருந்தும், பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. இதைப்பார்த்து, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் ஒதுங்கினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் விலகிச் சென்றனர். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரவலானது. தமிழக அரசு போக்குவரத்து துறையின் மீது அதிக கவனம் செலுத்தி இத்தகைய பழுதடைந்த பேருந்துகளை பழுது பார்க்கும் மாறும் பொதுமக்கள் கூறி இருக்கிறார்கள்
