Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேச இலங்கை பயணம் செய்யும் மோடி!

நரேந்திர மோடி இலங்கை நாட்டிற்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேசுகிறார்.

தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேச இலங்கை பயணம் செய்யும் மோடி!
X

KarthigaBy : Karthiga

  |  9 March 2025 1:00 PM

இந்தியா, இலங்கை, வங்கதேசம்,பூட்டான், மியான்மர், நேபாளம்,தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை கொண்ட அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு தாய்லாந்து நாட்டில் அடுத்த மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நான்காம்தேதி தாய்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மாநாட்டிற்கு பிறகு அவர் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரா குமார திசநாயகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதற்கு முன்பு கடந்த 2017,2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகள் இலங்கை அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அடுத்த மாதம் அவர் மேற்கொள்ள உள்ள பயணம் நான்காவது பயணமாகும்.அதே நேரம் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் இலங்கைக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இலங்கை அதிபரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எனவே பிரதமர் மோடி தனது பயணத்தில் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்தும் எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பட்டினம் முதல் திரிகோணமலை வரை கடல் வழியே பெட்ரோல் கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசனை எதிர்பார்க்கப்படுகிறது .இது தவிர இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருள் ஏற்றுமதி அதிகரிப்பது பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News