நோய்களைத் தடுக்கக்கூடிய சுகாதார சேவை - அதிக அக்கறையுடன் செயல்படும் மோடி அரசு!
நோய்களை தடுக்கக்கூடிய மறுவாழ்வு அளிக்கக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் சர்வதேச சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு கருத்தரங்கை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
நோய்களை தடுக்கக்கூடிய மறுவாழ்வு அளிக்கக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தவும் அனைவருக்கும் குறைவான செலவில் மருத்துவ சேவை கிடைக்க செய்வதிலும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி கொண்டுள்ளார் .இப்போது வரை நாட்டில் 22 அதிநவீன எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
செவிலியர் படிப்புகளுக்கான பயிற்சிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் 75 ஆயிரம் இடங்களை மத்திய அரசு சேர்க்கும் .கடந்த ஆண்டு 30,000 இடங்கள் உருவாக்கப்பட்டன. சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு இந்தியா வள மையங்கள் 19 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார இலக்குகளை எட்ட இவை உதவியுள்ளன. சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களும் முன் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது மருத்துவக் கல்வி காப்புரிமை மித்ரா என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. மருத்துவத்துறையில் புதுமைப் படைத்தலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடானது வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை எட்ட உதவும் என்றார்.